உள்நாடு 

2022 ஆண்டு, இலங்கையில் “நாவலர் ஆண்டு” ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது:

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை – “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.இந்த பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ. உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.இதன்போது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் திரு. மு. பத்மவாசன் அவர்களினால் தத்ரூபமாக வரையப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இரு திருவுருவப் படைப்புகள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டன.ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் திருவுருவ வர்ணப் படைப்பு, கௌரவ…

Read More
Latest | சமீபத்தியது மலையகம் 

தோட்ட தொழிலாளிகளுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை – ஜீவன் தொண்டமான்

அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலை செய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அக்கரபத்தனை பிளான்டேசனின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட முகாமைத்துவ தரத்திலான அதிகாரிகளுக்கும், இ.தொ.கா. உள்ளிட்ட தொழிற்சங்க பிரமுகர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் பிராந்திய தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று ஹட்டனிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ கிராம் பறித்தாக வேண்டும் என்பது உட்பட தோட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. அதேபோல் தொழிற்சங்கங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் உறுதியான இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தை முடிவடைந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், பெருந்தோட்ட மக்களை மிகவும் மோசமான நிலைக்கு அக்கரபத்தனை…

Read More
Latest | சமீபத்தியது மலையகம் 

மகாவலி ஆற்றில் குதித்த இளைஞன், யுவதி!

மஹியங்கனை பாலத்தில் இருந்து ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், ஆற்றில் குதித்த நபர் நீந்தி கரைக்கு வந்துள்ளதாகவும், அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். காணாமல் போனவர் ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் நேற்று காலை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறி வீட்டிலிருந்து வந்துள்ளனர். யுவதி ஆற்றில் குதித்ததாகவும், அந்த நபரும் ஆற்றில் குதித்ததாகவும் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

“சிரித்தால் தண்டனை” என்று மக்களுக்கு உத்தரவிட்டுள்ள நாடு

நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 1994-ம் ஆண்டு வடகொரியாவை ஆட்சி செய்த கிம் ஜோங் இல், நாட்டை 17 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி காலமானார். இதனையடுத்து, அவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இந்தநிலையில் தமது தந்தையின் நினைவுத்தினத்தை நினைவுக்கூரும் முகமாக வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என வடகொரிய அதிபர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். கிம் ஜோங் இல் இறந்த நாளான இன்று, ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வழமையாக இந்த துக்கம் 10 நாட்களுக்கு…

Read More
உள்நாடு 

பட்டதாரிகளுக்கு 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம்….

அரச சேவை பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.இதுவரை 50,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அரச சேவை பயிற்சியில் இணைக்கப்பட்டுள்ளனர்.பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அதே பாடசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தரமாக நியமிக்கப்படலாமென அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Read More
உள்நாடு 

இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த நனோ தொழில்நுட்ப நிறுவனம் தயார்….

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் பெறுமதியை அதிகரிக்கும் வகையில் பொஸ்பேட், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம் முன்வந்துள்ளது.பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதற்கட்ட நடைமுறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய அமைச்சில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.பொஸ்பேட் உரங்களின் மதிப்பை கூட்டி தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய உரக் கலவையைப் பயன்படுத்தியதனூடாக சோளப்பயிர்ச் செய்கை வெற்றியடைந்துள்ளதாக பேராசிரியை நிர்மலா கோட்டேகொட இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.இந்த புதிய வகை உரத்தைப் பயன்படுத்தி மரக்கறிகள் மற்றும் பிற பயிர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது வெற்றி அடைந்தால், இயற்கை விவசாயத்திற்குத் தேவையான அனைத்து கூறுகளையும் கொண்ட உயர்தர உரங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு பாராட்டு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா அவர்கள் நேற்று (15) பிற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.குறித்த சந்திப்பின்போது இலங்கையில் செயற்படுத்தப்படும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. “இலங்கையில் மிகச்சிறந்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் காணப்படுகிறது” என விக்னராஜா அவர்கள் குறிப்பிட்டார்.பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள பல நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டும் படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்திருப்பதாக கௌரவ பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.கொவிட் தொற்று நிலைமை காரணமாக உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.தடுப்பூசி ஏற்றல் செயற்பாடுகளின் ஊடாக சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிக்கும் என தான்…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு….

அநுராதபுரம் நொச்சியாகம பிரதேச செயலகத்தில் வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ அவர்களால் வழங்கப்பட்டது.மேலும் நொச்சியாகம பௌத்த நிலைய விகாரையில் பார்வையற்றோருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மூலம் 1000 கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

Read More
Latest | சமீபத்தியது 

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை…

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதி செய்யப்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும், விரைவில் டொலர் வழங்கப்பட்டால் பொருட்களை விடுவிக்க முடியும் எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். இதன்படி, தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 25 மில்லியன் டொலர்களை விடுவிக்க இணங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான பணம் வழங்கும் பணி இன்று முதல் நடைபெற உள்ளது. இதேவேளை, நாணய மாற்று விகிதக் கொள்கையில் எவ்வித மாற்றமும்…

Read More
Latest | சமீபத்தியது 

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) க்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கோவிட் சூழ்நிலை காரணமாக பிற்போடப்பட A/L பரீட்சை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More