“மனிதநேயத்தின் செயற்பாடு” கௌரவ பிரதமருக்கு வழங்கி வைப்பு-!
இளம் எழுத்தாளரான சளனி வாசலபண்டார எழுதிய “மனிதநேயத்தின் செயற்பாடு” (“மனுஷ்யத்வயே மெஹெயும”) நூல் நுவரெலியா பிரதமர் இல்லத்தில் வைத்து நேற்று (18) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கண்டி புனித நல்லாயன் கல்லூரியின் மாணவியாக இருந்தபோது “அன்புள்ள மாஷா”, “அழியாத நினைவு” உள்ளிட்ட நான்கு நூல்களை எழுதியிருந்த நிலையில், “மனிதநேயத்தின் செயற்பாடு” (“மனுஷ்யத்வயே மெஹெயும”) நூல் அவரது ஐந்தாவது நூலாகும்.
உயர்தரப் பரீட்சையில் சிறப்பாக தேர்ச்சி பெற்று தற்போது பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள அவர், முப்பது ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மனிதநேய நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த “மனிதநேயத்தின் செயற்பாடு” (“மனுஷ்யத்வயே மெஹெயும”) என்ற நூலை எழுதியுள்ளார்.
மஹாசங்கத்தினர் மற்றும் குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களுக்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.
நுவரெலியா உதவி கல்விப் பணிப்பாளர் (பிரிவேனா) நுவரெலியா பௌத்த மத்தியஸ்தானாதிபதி சாஷ்ரபதி கிரிஒருவே திரானந்த தேரர், உதவி கல்வி பணிப்பாளர் (பிரிவேனா) ராஜகீய பண்டித கலாநிதி புஸ்ஸல்லேவே ஷீலவிசுத்தி தேரர் ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தனர்.