உள்நாடு 

மாதம் ஒருமுறை பொலிஸ் தினம்….

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகரவின் கருத்திட்டத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் பொலிஸ் தினத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதே, இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன் முதலாவது நிகழ்வு, இன்று (22) புதன்கிழமை காலை 9.00 மணி முதல், பத்தரமுல்லை – “சுஹுருபாய” வில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

முதலாவது இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment