உள்நாடு 

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கைநெறிகளை ஆரம்பியுங்கள் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கைநெறிகளை ஆரம்பிக்குமாறு தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை முன்னெடுக்கும் அரச நிறுவனங்களுக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (31) ஆலோசனை வழங்கினார். அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். தொழில்முறை மட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாடசாலையிலிருந்து விலகி வெளிநாடு செல்லும் இளைஞர் யுவதிகளை அங்கு திறமையான தொழிலாளர்களாக பணிபுரிவதற்கு வழியேற்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. திறமையுள்ள போதிலும் பயிற்சி சான்றிதழ் அற்றவர்களுக்கு குறுகிய கால பயிற்சி மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையையும், இந்நாட்டு இளம் சமூகத்தினரையும் இணைக்கக்கூடிய ஒரு முறைமையை உருவாக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

சவூதி அரேபியாவினால் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நன்கொடை…

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை சமூகத்துடன் இணைந்து இலங்கை கலாச்சார மன்றம் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இந்த நன்கொடை வழங்கப்பட்டது. உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க ஆகியோரிடம் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இந்த நன்கொடையைக் கையளித்தார். சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா மற்றும் தூதரக ஊழியர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உதவியுடன் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்ததாக தெரிவிக்கபப்டுகின்றன.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விரைவில் குணமடைய சீன சபாநாயகர் வாழ்த்து…

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விரைவில் குணமடைவதற்கு வாழ்த்துத் தெரிவித்து சீனமக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்றத்தின் சபாநாயகர்) லீ சன்ஷூ கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். கொவிட்-19 சவாலின் ஆரம்பத்திலிருந்து இலங்கையும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உதவிகளைப் புரிந்திருப்பதுடன், இதன் மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான பாரம்பரிய உறவு பலமைடைந்துள்ளது. தொற்றுநோய்க்கு எதிராகப் போராட சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என்றும் சீன சபாநாயகர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளின் சட்டவாக்க சபைகளுக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதன் ஊடாக இலங்கையுடனான உறவுகளை மேலும் மேம்படுத்த சீனா உத்தேசித்துள்ளதாக சீன சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து செயற்படுத்த சுகாதாரத்துறையின் பிரதானிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். டிசெம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கை இன்று வரை (31) நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. திருத்தங்களுக்கு உட்பட்டு (சிறப்பு காரணங்களுக்கு மட்டும்) இந்த சுற்றறிக்கை பெப்ரவரி 28ஆம் திகதி வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்த கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

ஜனவரி மாதம் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்…

ஜனவரி மாதம் இலங்கைக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மாதம் மாத்திரம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75,000 கடந்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரை 76,536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

யானை – மின்சாரவேலியில் சிக்குண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு…

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பிரதேசத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்குண்டு பலியான சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலக தனக்கு சொந்தமான காணியினை பராமரிக்கும் பொருட்டு அங்கு பயிரிடப்பட்ட பயிர்களை பாதுகாத்து வருவதாகவும், அவர் தனது காணியினை சுற்றி யானைகள் உட்பிரவேசிக்காமல் சட்டவிரோதமான முறையில் மின்சார வேலிகளை அமைத்து தனது செய்கைபண்ணப்பட்ட காணியினை பாதுகாரத்து வந்ததாகவும் அறியமுடிகின்றது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து தனது காணிக்கு சென்ற வீடு திரும்பாத நிலையில் அவரின் மனைவி குறித்த இடத்திற்கு சென்ற போது மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்து இருந்ததாகவும் குறித்த நபர் அண்மையில் யானையின் தாக்குதலுக்கு அகப்பட்டு உயிர் தப்பியவர் என்றும்…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

சதொச ஊடாக தேங்காய் அதிகபட்ச விலையாக 75 ரூபாய்க்கு…..

சதொச நிறுவனத்தின் ஊடாக இன்று (31) முதல் ஒரு பெரிய தேங்காய் அதிகபட்ச விலையாக 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையுடன் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஒரே நேரத்தில் 5 தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

மறு அறிவித்தல் வரை மின்வெட்டு இல்லை…

மறு அறிவித்தல் வரை மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்வெட்டை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்க இன்று நடைபெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறியுள்ளார். இதேவேளை ஜனவரி 08 ஆம் திகதி முதல் இன்று வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாததன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறினார்.

Read More
Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு உள்நாடு 

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா…

எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நுவன் துஷார தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இணைவதற்கான வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் அணியின் உதவிப் பணியாளர் டில்ஷான் பொன்சேகாவுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. குழு உறுப்பினர்களுக்கு மேற்கொண்ட பிசிஆர் சோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுடனான ரி20 சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி பெப்ரவரி 03 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.

Read More
உள்நாடு 

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள 21 வீதிகளுக்கு பூட்டு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பில் உள்ள 21 வீதிகள் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள இந்த 21 வீதிகளும் காலை 5 மணி முதல் சுதந்திர தின நடவடிக்கைகள் முடியும் வரை மூடப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதனால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அழைப்பிதழ் மற்றும் அந்தந்த கார் பார்க்கிங் விபரங்களைக் காண்பிக்கும்போது, பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 7:30 மணி வரை, அழைப்பாளர்கள் தங்கள் வாகனங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடத்திற்குச் செல்லலாம் என்றும் அவர் அறிவித்தார்.

Read More