Politics | அரசியல் உள்நாடு 

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகப் போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை-!

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகப் போவதாக பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கடந்த சில தினங்களாகவும் இன்றைய தினத்திலும் (03) வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இத்தகைய பொய் பிரசாரங்களை பிரதமர் ஊடக பிரிவு நிராகரிக்கிறது.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

நிதியமைச்சர் இந்தியாவுக்கு பயணம்….

புத்தாண்டுக்கு முன்னரான விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்று, புத்தாண்டு தினத்தன்று நாடுதிரும்பிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, இந்தியாவுக்கு மீண்டும் விஜயம் செய்யவுள்ளார். நிதியமைச்சராக அவர், பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்குச் சென்று பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.அந்நிலையில் , ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இந்தியாவுக்குச் செல்லும் அவர், ஜனவரி 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டிசெம்பர் முதலாம் திகதியன்று பெசில் ராஜபக்‌ஷ இந்தியா சென்றிருந்தார்.மேலும் ,இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் , எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு…

Read More
உள்நாடு 

பேருந்து கட்டண விலைகளில் மாற்றம்!

நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள பஸ் பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.இதன்படி பஸ் பயணக்கட்டணத்தை அதிகரிப்பதற்குக் கடந்த 29ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது.அதற்கமைய ஆரம்ப கட்டமாக, பஸ் பயண கட்டணங்கள் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 17 ரூபாவாக நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இத்துடன் , ஏனைய பஸ் பயணக்கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணங்களும் அதிகரிப்பு!!

பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை 20 சதவீதத்தால் இன்று(03) முதல் உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி ,எரிபொருள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தமக்கான எந்தவித நிவாரணங்களையும் அரசாங்கம் இதுவரை வழங்கவில்லையென அந்த சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.குறைந்த விலையில், போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதால் பாரிய நட்டத்தினை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பில், அரசாங்கத்திற்கு முன்னதாகவே தெளிவுபடுத்தியிருந்தபோதிலும், அதுகுறித்து எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை.அதற்கமைய ,மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடுவோர் 15 சதவீதத்தினாலும், மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடுவோர் 20 சதவீதத்தினாலும் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது Medicine Iமருத்துவம் 

பேருவளையிலும் ஒமிக்ரொன் தொற்று…

பேருவளையில் ஒமிக்ரொன் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி ,பேருவளை சீனக் கோட்டையைச் சேர்ந்த 30 வயதுடைய மாணிக்கக்கல் வியாபாரி ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார பிரிவைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர் முதித அமரசிங்க தெரிவித்துள்ளாா்.மேலும் வெளிநாடு செல்லும் நோக்கில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More
உள்நாடு 

புதிதாக திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி….

புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளர் ஆர். டி. ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இதற்கான விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயமா?

பொதுமக்கள், பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது, கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது, இன்று முதல் கட்டாயமாக்கப்படுகின்ற போதிலும், அது நடைமுறையாவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் எடுக்கும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அதற்காக செயலி ஒன்றையும் கிவ். ஆர் கோட் (QR Code) ஒன்றையும் உருவாக்க வேண்டும். இதற்கான பணிகள் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த செயன்முறைக்கு இரண்டு வார காலம் எடுக்கும்.இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குப் பிரவேசிப்பது தொடர்பில், சட்ட கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையில் செயற்பட எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

பயிலுனர் பட்டதாரிகளுக்கு நாளை நிரந்தர நியமனம்..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சரவை உபகுழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.இலவசக் கல்வியின் பிரதிபலனாக உயர்கல்வி கற்றவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக இந்த நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றது.53 ஆயிரம் பயிலுனர் பட்டதாரிகள் தற்போது அரச நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றனர். இவர்களில் ஒருவருடப் பயிற்சிக் காலத்தினை நிறைவு செய்த 42 ஆயிரத்து 500 பேருக்கு நாளை முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படும். அத்துடன் கடந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர் பட்டதாரிகளாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

Read More
உள்நாடு 

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பம்…

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை(03) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.பாடத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இது முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

தொழிலாளர்கள் விடயத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளோம்..

‘சுபீட்சத்தை நோக்கி’ எனும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய அரச தனியார் துறையில் கடமையாற்றுபவர்களின் தொழில் பாதுகாப்பை ஏற்படுத்தல் நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கின்ற தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி பல விடயங்களை தொழில் அமைச்சு என்ற வகையில் 2021 ஆம் ஆண்டு பல முன்னேற்பாடுகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும் அவற்றின் சிறந்த பலன்களை தற்பொழுதும் தொழிலாளர்கள் அனுபவித்து வருவதாகவும் இது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாக அமைந்துள்ளது எனவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் தொழில் அமைச்சு மேற்கொண்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துகின்ற பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தேசிய ரீதியில் ஆகக் குறைந்த சம்பளமாக இருந்த 10,000 ரூபாவை…

Read More