உள்நாடு 

கித்துள் அதிகார சபை அமைக்க நடவடிக்கை….

இரத்தினபுரி மாவட்டத்தில் 40 ஆயிரம் புதிய கித்துள் மரங்களை நடுவதற்கான திட்டம் நடைமுறைப்படு த்தப்பட்டுள்ளது.இம்மாவட்டத்தில் கித்துள் செய்கையை நாடளாவிய ரீதியில் பிரபலப்படுத்தும் திட்டத்திற்கிணங்க இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது இதற்கிணங்க இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களில் 28 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இம்முயற்சியை வியாபாரத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனஇத்திட்டத்துக்கு அமைய இறப்பர், தேயிலை மற்றும் மிளகு போன்ற வர்த்தகப் பயிர்களைப் போன்று கித்துள் செய்கையை விஸ்தரித்து இதற்கான தனியான கித்துள் அபிவிருத்தி அதிகார சபையொன்றையும் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டத்திற்கமைய கேகாலை மாவட்டத்தின் பின்னவலை யானைகள் சரணாலயத்திலுள்ள யானைகளுக்கு உணவுக்காக கித்துள் மரங்களை வெட்டுவதை தடுத்து யானைகளுக்கான மாற்றுணவு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் சப்ரகமுவ மாகாண சபையின் அவதானம் திரும்பியுள்ளது.

Related posts

Leave a Comment