உள்நாடு 

புதிதாக திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி….

புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளர் ஆர். டி. ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இதற்கான விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment