Politics | அரசியல் மலையகம் 

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மானிய விலையின் அடிப்படையில் கோதுமை மாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

இதன்படி 15 கிலோ கோதுமை மா 80 ரூபாபடி வழங்கப்படும். இதன்மூலம் அவர்களுக்கு கிலோவுக்கு 40 ரூபா நிவாரணம் வழங்கப்படுகின்றது. ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment