Latest | சமீபத்தியது உள்நாடு 

தலதா மாளிகையில் ஜனாதிபதி மத வழிபாட்டில் ஈடுபட்டார்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று (05) முற்பகல் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை, தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார். தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக வருகை தந்திருந்த பொதுமக்களும், ஜனாதிபதி அவர்களுக்கு அமோக வரவேற்பளித்தனர். இதன்போது அந்த மக்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அவர்களின் நலன் விசாரித்தறிந்து கொண்டார். மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Read More
World | உலகம் உள்நாடு 

உலகில் அதிகம் பார்வையிடப்படும் 20 நாடுகளில் இலங்கை 2வது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள CNN செய்தி சேவையின் பயணப் பிரிவான CNN டிராவல், உலகளாவிய பிளேக் நோய்க்குப் பிறகு உலகம் மீண்டும் திறக்கும் போது இந்த இடங்களை கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக பெயரிட்டுள்ளது.உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட நாடு பிரான்ஸ். அதாவது 90 மில்லியன். உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட 20 நாடுகளில் பதினெட்டு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள். அவற்றில் இரண்டு ஆசிய நாடுகள், தாய்லாந்து மற்றும் சீனா.கோவிட் தொற்றுநோய்க்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை நெருங்கியது. இதன் மூலம் நமது வருமானம் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது நாட்டின் மொத்த வருமானத்தில் 4%க்கு அருகில் உள்ளது. கோவிட் தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு 682 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.2025ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குக் கொண்டுவருவதே…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா உறுதி…

முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் ஜனவரி முதலாம் திகதி முதல் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More
World | உலகம் 

சீனாவில் மீண்டும் கொரோனா…

கொரோனா வைரஸ் முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. அதன்பின் உலகம் முழு வதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.இதனால் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று 3 மாதத்துக்கு பிறகு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.சமீபத்தில் சியான் நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அந்த நகரில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.அந்த நிலையில் சீனாவில் மேலும் ஒரு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஹெனான் மாகாணம் யூசவ் நகரில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.இதை அடுத்து 1¼ கோடிக்கு…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

இன்றைய காலநிலை!

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி ,முல்லைத்தீவு மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில்மழையுடனான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் ,இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படடிக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்டிற்கு…

மேலும் 10,000 தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (05) நாட்டை வந்தடையவுள்ளதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கமைய நாளாந்தம் 10,000 முதல் 15,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்! அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்

முன்னர் எழுத்துமூலமா முறைப்பாடுகளே ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் தற்போது 1960 என்னும் விசேட இருபத்திநான்கு மணிநேர தொலைபேசி சேவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எந்தவேளையிலும் தொடர்புகொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஸ்ட உறுப்பினர் ரி.பி.பரமேஸ்வரன் (R.P.Parameswaran) தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண அலுவலகத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கமால் சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது புதிய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையிலான உறவினை வளர்ப்பதற்காக மிகவும் முக்கியமான கொள்கையாக முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் (K.Karunakaran) தெரிவித்தார். இதன்போது கருத்து…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களையும் முன்மொழிவுகள் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena ) தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களையும் வகையில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தங்கள் இந்த மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 247000 ஆசிரியர்களுக்கும், 16000 அதிபர்களுக்கும் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பளங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டை களைவதற்கான திருத்தி அமைக்கப்பட்ட சம்பளங்களை வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட சம்பளங்களை வழங்குதவற்கான அனைத்து நடவடிக்கைகளும் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என  குறிப்பிட்டுள்ளார் சம்பள முரண்பாட்டை களைவது குறித்த சுற்று நிருபம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது இரு இடங்களில் தாக்குதல்! : பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம், கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பஸ் நிலையத்தில் நேற்று(4) இரவு வேளை குறித்த பேருந்தினை இடைமறித்த கும்பல் ஒன்று பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், சாரதி மற்றும் நடத்துனர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவத்தில் சாரதி மற்றும் நடத்துனர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன், பருத்தித்துறை, திருகோணமலைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

மத்திய வங்கி உத்தரவு குறித்து வெளியாகும் வதந்திகளில் உண்மையில்லை!

இலங்கை மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal ) தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி கணக்குகளில் காணப்படும் டொலர் பெறுமதிகள் இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்றது என சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கை மத்திய வங்கியின் உத்தரவிற்கு அமைய வணிக வங்கிகள் இவ்வாறு தங்களது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளில் காணப்படும் அந்நிய செலாவணி பெறுமதிகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சில நாசகார சக்திகள் இவ்வாறு போலித் தகவல்களை பரப்பி வருவதாகவும் இந்த வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அஜித் நிவாட் கப்ரால் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

Read More