Uncategorized 

ஆசிரியர்-அதிபர்களின் வேதன முரண்பாடு தீர்வு- சுற்றறிக்கை வெளியீடு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதன முரண்பாடுகளை நீக்குவதற்கான சுற்றறிக்கை அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி, கையொப்பமிட்ட இந்த சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது

2021, ஆகஸ்ட் 30, மற்றும் 2022 ஜனவரி 03, ஆகிய திககளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்க ஆசிரியர் சேவை, அதிபர் சேவை மற்றும் ஆசிரியர் கல்வியாளர் சேவை ஆகியவற்றில் வேதன விகிதங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, வேதன திருத்தங்கள் 2022, ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வருகின்றன. 

Related posts

Leave a Comment