Politics | அரசியல் உள்நாடு 

சவால்களுக்கு மத்தியிலும் உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம்

சவால்களுக்கு மத்தியிலும் உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை இன்று (06) மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.மலியதேவ மகளிர் கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம் மற்றும் மாணவிகள் கௌரவ பிரதமர் உள்ளிட்ட விருந்தினர்களை வரவேற்றனர். அதனை தொடர்ந்து கட்டிட திறப்புவிழாவை குறிக்கும் வகையில் அதற்கான நினைவு பலகை கௌரவ பிரதமரினால் திறந்துவைக்கப்பட்டது.புதிய கட்டிடத்தை கண்காணித்த கௌரவ பிரதமர், அதன் வகுப்பறையொன்றை திறந்து வைத்தார்.மலியதேவ மகளிர் கல்லூரியின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு 25 ரூபாய் பெறுமதியான நினைவு முத்திரையொன்றும் முதல் நாள் உறையும் கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது. தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்களினால் விசேட நினைவு முத்திரை கௌரவ பிரதமருக்கு வழங்கப்பட்டது.கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகியமையை சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், தொழில்நுட்பம் நன்மை தருவதை போன்றே தீமையை ஏற்படுத்தும் என்பதால் சரியானதை தெரிவுசெய்ய பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறித்து பெற்றோர் போன்றே ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மலியதேவ மகளிர் கல்லூரியின் ஊடகப் பிரிவு மாணவியரை சந்தித்த கௌரவ பிரதமர், ‘உங்களுக்கு உள்ள குறைப்பாடுகள் என்ன’ என்று மாணவிகளிடம் வினவினார். ‘எமக்கு கெமரா இல்லை’ என மாணவிகள் குறிப்பிட்ட நிலையில் அவர்களின் தேவையை நிறைவேற்றுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களிடம் அச்சந்தர்ப்பத்திலேயே பணிப்புரை விடுத்தார்.குறித்த நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,நீங்கள் கல்வி கற்கும் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியானது அறிவும் திறமையும் கொண்ட ஒரு பெருமைமிக்க தலைமுறையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் ஒரு பாடசாலை என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். கல்வியிலும் விளையாட்டிலும் மலியதேவ மகளிர் முன்னணியில் இருப்பதை நாம் அறிவோம். எனவே, இந்த மலியதேவ மகளிரை நினைத்து நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம்.இந்த பிள்ளைகளை கௌரவிக்கும் வகையிலேயே இந்த நிகழ்ச்சிக்கு வர ஆர்வமாக இருந்தேன். இன்று நீங்கள் பெற்றுள்ள இந்த புதிய கட்டிடம் உங்கள் பாடசாலைக்கு கிடைத்த சிறந்த பரிசுகளில் ஒன்றாகும்.பிள்ளைகளின் திறமைகளுக்கு மதிப்பளித்து, அந்த திறமைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளுக்கு ஊக்கம் கிடைக்கும். குழந்தைகளே நமது எதிர்காலம்.நமது நாட்டின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் குருநாகல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் உள்ளன என்பதை சிலவேளைகளில் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இம்மாவட்டத்தில் 30 தேசியப் பாடசாலைகள் உட்பட 873 அரச பாடசாலைகள் உள்ளன. அதுமட்டுமின்றி இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் பரீட்சைகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.கடந்த ஐந்து வருடங்களில் குருநாகல் பிள்ளைகள் அதிகூடிய பெறுபேறு வீதத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அது குறித்து நீங்கள் பெருமையடைய வேண்டும். அது மாத்திரமன்றி குருநாகல் மாணவர்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சையில் அதிசிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர். உங்கள் பாடசாலை அதில் முன்னணியில் உள்ளது.உங்கள் பாடசாலை நாட்கள் உங்கள் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான காலமாகும். இந்த ஆசிரியர்கள் உங்களுக்கு கல்வியை மாத்திரமன்றி, கல்வி சாராத செயல்களிலும் ஈடுபட வாய்ப்பளிக்கின்றனர். எதிர்கால சவால்களை நீங்கள் சமாளிக்க விரும்பினால், நீங்கள் கல்வி மற்றும் கல்வி சாராத செயல்பாடுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.எனவே இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் கல்விக்கு அப்பால் கல்விசாரா நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளனர் என்பதை அறிந்த போது மேலும் மகிழ்ச்சி அடைந்தேன். எமது தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியில் அங்கம் வகிக்கும் 06 பேர் உங்கள் கல்லூரியின் மாணவிகள் என தெரியவருகின்றது.அது மாத்திரமன்றி வலைப்பந்து உட்பட பல விளையாட்டுகளில் தேசிய மட்டத்திற்கு சென்ற வீராங்கனைகள் மற்றும் எமது நாட்டின் முதலாவது விளையாட்டு விரிவுரையாளரும் இப்பாடசாலையிலேயே தோற்றம் பெற்றுள்ளார்.அழகியல் கலையிலும் நீங்கள் சிறந்து விளங்குகின்றீர்கள்.நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றி பெறும் உங்களுக்கு, அழகியல் பாடம் தொடர்பான கட்டிடத்தின் குறைபாடுகளை எதிர்காலத்தில் கல்வி அமைச்சு நிவர்த்தி செய்யும் என நம்புகிறேன்.இளம் பௌத்த சங்கத்தின் ஆலோசனையின் பேரில் 69 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, தற்போது சுமார் 4500 மாணவிகளை கொண்ட நாட்டின் முன்னணி பெண்கள் பாடசாலைகளில் ஒன்றாக திகழ்கிறது.இப்பாடசாலை சாதாரணமாக இந்தளவிற்கு முன்னேற்றமடையவில்லை. இதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் பல தியாகங்களைச் செய்துள்ளனர். அந்த கடந்த கால தியாகங்களின் அடிப்படையிலேயே இன்று நீங்கள் பெருமையுடன் இப்பாடசாலையில் கல்வி கற்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தப் பெருமையை எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்வது உங்கள் பொறுப்பாகும்.உங்களிடம் உள்ள சக்தி அறிவு. கல்வியின் மூலமே அறிவு கிடைக்கிறது. யாரையும் சார்ந்திருக்காது உங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கான வாய்ப்பு அறிவால் ஏற்படுத்தப்படுகிறது. எனவே செல்வந்தர்களாக இருந்தாலும் சரி ஏழைகளாக இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அறிவாற்றலுடன் வளர்க்க வேண்டும்.உங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்து கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாடசாலைக் கல்வியை நாங்கள் முறையாகத் தொடங்கினோம். ஆனால், அன்று கொவிட் காரணமாக வீட்டில் இருந்த பிள்ளைகள் கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகி இருப்பதாக பெற்றோர்கள் முறையிடுகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூட எச்சரித்துள்ளனர். தொழில்நுட்பத்தின் ஊடாக நன்மை ஏற்படும் அதேவேளை தீமைகளும் உள்ளன. எனவே தவறான வழியில் செல்லாது தொழில்நுட்பத்தின் ஊடாக நன்மையை பெறுவதற்கு பிள்ளைகள் அறிந்துக் கொள்ள வேண்டும். எது சரி எது தவறு என்பதை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளது.கல்விக்காக இதுவரை எந்த அரசாங்கமும் ஒதுக்காத தொகையை இந்த ஆண்டு நாம் ஒதுக்கியுள்ளோம். ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வை வழங்க முடிந்தது. பிள்ளைகளை மனதில் கொண்டே நாம் அனைத்தையும் செய்கிறோம். எனவே, குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில், தற்போது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை சட்டப்படி தடை செய்துள்ளோம்.மேலும், பாடசாலை செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் திட்டமொன்றையும் செயல்படுத்தி வருகிறோம்.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, உண்மையான திறமையாளர்களாக எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள். சவால்களுக்கு மத்தியிலும் உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். எனத் தெரிவித்தார்.நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,இப்பாடசாலை வடமேல் மாகாணத்தில் முன்னணியில் திகழும் பெண்கள் பாடசாலையாகும். இந்தக் கல்லூரி வரலாற்றில் தலைசிறந்த பிள்ளைகளை உருவாக்கியுள்ளது. குருநாகல் பற்றிப் பேசினால் மலியதேவ ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி பற்றியே பேசப்படும்.ஜனாதிபதியின் செயலாளரும், உங்களது காலப்பகுதியின் திறைசேரியின் முன்னாள் செயலாளருமான கலாநிதி பி.பீ ஜயசுந்தர தனது உயர் கல்வியை மலியதேவ ஆண்கள் கல்லூரியிலேயே கற்றார். எமது அரசாங்கம் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்ட அரசாங்கமாகும். நமது அரசாங்கம் மட்டுமல்ல, இந்த நாட்டு மக்கள், இந்த முழு உலக மக்களும் இயற்கையாகவே சவாலுக்கு உள்ளாகியிருந்த காலம் அது. எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உங்கள் தலைமையில் முதலாவது, இரண்டாவது;டர் மற்றும் பூதடுப்பூசியை எமது மக்களுக்கு வழங்கியது மட்டுமன்றி, பிள்ளைகளுக்கும் தடுப்பூசி வழங்கி எமது மக்களின் உயிரைக் காப்பாற்றியமை வரலாற்றில் இடம்பெறுகின்றது.இப்போது புத்தாண்டு பிறந்துள்ளது. புதிய வழியில் சிந்தியுங்கள். நேர்மறையாயாக சிந்தித்து நாம் முன்னேற வேண்டும். அதைத்தான் இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எமக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அந்நியச் செலாவணி பற்றாக்குறை இருப்பது எங்களுக்குத் தெரியும். அதனால், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிவாயுவில் சிக்கல் உள்ளது. எரிவாயு வெடிப்பு பற்றி நேற்று என்னிடம் கேட்கப்பட்டது. எனக்கு பெரிய பிரச்சினை இருக்கு, கொழும்பு 7 இல் எரிவாயு வெடிக்காது என்றேன். வடக்கிலும் வெடிக்காது. குருநாகல் நகரிலும் வெடிக்காது. கண்டியிலும் வெடிக்காது. வௌ; வேறு இடங்களில் மட்டும் வெடிக்கிறது. எனவே, கௌரவ பிரதமர் அவர்களே, இதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் இரகசியமாக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அடுத்த சில வாரங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நம் மக்கள் நேர்மறையாக சிந்திக்கும் காலம். ஒரு நாடாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும்.கல்வி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன,இக்கல்லூரியின் பழைய மாணவர்களில், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பல பழைய மாணவர்கள் உள்ளனர். இந்த பாடசாலைக்கு அந்த பழைய மாணவர்களின் ஊக்குவிப்பும் கிடைக்கிறது. எனவே, புதிய பாதைகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் இந்த கட்டிடம் பாடசாலைக்கு ஒரு தனித்துவமான வளமாகும். இதன் மற்றுமொரு பகுதியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ பிரதமர் அவர்கள் இதன்போதும் பணிப்புரை வழங்கினார். இம்முயற்சியை செயல்படுத்த இந்த ஆண்டு நிதி ஒதுக்குவோம் என்பதை கல்வி அமைச்சு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.கௌரவ பிரதமர் அவர்களே, இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். எனவே, இவ்வாறான உயர் பெறுபேறுகளைக் கொண்ட எமது மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் துறையின் பாரம்பரியத்திற்காக பணியாற்றும் சவால்களை தொடர்ந்து செயற்படுத்த முடியும்.இக்கல்லூரிக்கு ஒய்.எம்.பி.ஏ. அமைப்பு ஆரம்ப காலத்தில் தலைமை தாங்கி மிகப்பெரிய நன்கொடைகளை வழங்கியிருந்தது. அத்துடன், அன்றிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட அந்தப் பயணத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்காக அதிபர்களின் தலைமைத்துவம் பாட அறிவில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்டது.கல்வி முன்னேற்றத்தில் பிள்ளைகள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் அந்தப் பணியை முடிக்க வேண்டிய பொறுப்பு குடிமக்களாகிய நமக்கு உள்ளது.கௌரவ பிரதமர் அவர்களே, உங்கள் ஆசியுடனும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆசியுடனும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 225,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் ஜனவரி மாத சம்பளத்தில் இருந்து அதிகரிக்கப்படும் என்பதை கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் இன்று தெரிவிக்க விரும்புகின்றேன்.அறிவு மட்டுமே வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க விடயம். புயல், வறட்சி, வெள்ளம், சுனாமி போன்ற அனர்த்தங்களில் போது மக்கள் பதுக்கி வைத்த பணத்தை எல்லாம் இழக்கலாம். ஆனால் எஞ்சும் ஒரே விடயம் கல்வி மாத்திரமே ஆகும். அதுவே நமக்கு மீண்டெழுவதற்கான தைரியத்தை வழங்கும். எனவே இன்று நீங்கள் செலவழிக்கும் இந்த நேரத்தையும் காலத்தையும் மீளப்பெற முடியாது. நீங்கள் முந்தைய ஆண்டு இருந்த வகுப்பிற்கு திரும்ப செல்ல முடியாது. எனவே, வகுப்பிலும் கல்லூரியிலும் செலவிடும் நேரத்தில் நீங்கள் பெறும் அறிவு எனும் மாபெரும் வளத்தை உங்கள் வாழ்வில் பெற்று நம் நாட்டின் உன்னத குடிமக்களாவதற்கான வலிமையும், தைரியமும் கிடைக்கட்டும்! என்று வாழ்த்தினார்.குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாணண்டோ, தினேஷ் குணவர்தன, வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் த பீல்ட் வசந்த கரன்னாகொட, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான டீ.பீ,ஹேரத், சீதா அரம்பேபொல, சனத் நிசாந்த, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயரத்ன ஹேரத், குணபால ரத்னசேகர, சாந்த பண்டார, சமன்பிரிய ஹேரத், அசங்க நவரத்ன, யூ.கே.சுமித், பேராசிரியர் சரித ஹேரத், மஞ்சுளா திசாநாயக்க, குருhகல் மேயர்துஷார சஞ்ஜீவ விதாரன, குருநாகல் பிரதேச சபையின் தவிசாளர் அச்சல நிமந்த, அதிபர் பி.என்.எஸ்.டீ.அபேவிக்ரம உள்ளிட்ட அரச அதிகாரிகள், கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment