Uncategorized 

லங்கா பொஸ்பேட்டின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் ஊழியர்களைப் பாராட்டும் நிகழ்வு

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த நிறுவனம் விவசாய அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தின் போது நட்டத்தில் இருந்த இந்த நிறுவனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பொஸ்பேட் உர உற்பத்தியை இரட்டிப்பாக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினேன். இலங்கையில் ஏற்றுமதி மற்றும் பாவனைக்கு பெறுமதி சேர்ப்பு உரங்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினேன். இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் திரு. டி.எம்.எல். பண்டாரநாயக்க, விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா, கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம், பாஸ்பேட் உர உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment