Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

அமைச்சரவை முடிவுகள் (10.01.2022) – இலங்கையின் கல்வி அமைச்சுக்கும், ஹங்கேரியாவின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையிலான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்….

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூர் மாணவர்களுக்கான ‘STEPENDIUM HUNGARCUM’ புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2022-2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பிரதான 08 பட்டப் படிப்புக்களும், பட்டப்பின் படிப்புக்கள் 08 உம், 04 கலாநிதிப் பட்டப்படிப்புக்களை பயில்வதற்கான சந்தர்ப்பம் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கின்றது.

அதற்கமைய, கல்வி அமைச்சுக்கும், ஹங்கேரியாவின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

Leave a Comment