Politics | அரசியல் 

அமைச்சரவை முடிவுகள் (10.01.2022) – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்து அரசாங்கங்களுக்கிடையே சுகாதாரப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்…

இருநாடுகளுக்கும் இடையில் சுகாதார துறையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரியும் சுகாதார சேவை தொழில்வாண்மையாளர்களின் உரிமைகளை உறுதி செய்தல் உள்ளிட்ட இருதரப்பினரும் உடன்படுகின்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய சங்கத்திலிருந்து பிரிந்த பின்னர் அந்நாட்டின் சுகாதாரத் துறையில் உருவாகி வரும் தொழில் வாய்ப்புக்களை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வதற்கும் இதன்மூலம் இயலுமை கிட்டும்.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வில் கையொப்பமிடுவதற்காக தொழில் உறவுகள் அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

Leave a Comment