உள்நாடு 

தேவாலயத்திற்கு கைக்குண்டை கொண்டு வந்த நபர் அடையாளம் காணப்பட்டார்….

கொழும்பு − பொரள்ளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு கைக்குண்டு கொண்டு வந்த பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுளளளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன்படி ,பொரள்ளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து நேற்று (11) மாலை கைக்குண்டொன்று மீட்கப்பட்டது.அதற்கமைய குறித்த இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரே, இந்த கைக்குண்டை கொண்டு வந்த பிரதான சந்தேகநபர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.மருதானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலும் ,சந்தேகநபரிடம் பொலிஸார் தற்போது விரிவின விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

Leave a Comment