அர்ஜுன் கபூர் – நடிகை மலைக்கா பிரேக்கப்…. வதந்திக்கு முற்றுபுள்ளி….

அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து இருக்கிறார் போனி கபூர். பொங்கலுக்கு வர வேண்டிய படம் கொரோனா காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்நிலையில் போனி கபூர் குடும்பத்துக்கே கொரோனா என சமீபத்தில் செய்தி வந்து அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்து இருந்தது.

போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது மூத்த நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வந்தார். அவர்கள் கடந்த சில வருடங்களாக ஜோடியாகவே இருந்து வரும் நிலையில் தற்போது திடீரென பிரிந்துவிட்டனர் என பாலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவியது.

இந்நிலையில் தற்போது அது உண்மையில்லை என அவர்களே இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்து உள்ளனர்.

Related posts

Leave a Comment