பரசூட்டில் குதித்தவர் விபத்து….

கலஹா, லூல்கந்துர பகுதியில் இருந்து பரசூட்டில் பயணித்த 35 வயதுடைய ரஷ்ய பிரஜையொருவர் ரலிமாங்கொடயில் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் பரசூட்டில் பறந்த வேளையில் தரையிங்க முற்படுகையில் அவரது பரசூட் துரதிர்ஷ்டவசமாக 30 அடி உயரமுள்ள மரத்தில் சிக்கிக் கொண்டது.


இதனால் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ளான நபர், காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment