மத்திய வங்கி ஆளுநர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு…..

இன்று மத்திய வங்கி ஆளுநர் அலுவலகத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன்படி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற இருதரப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்.

இந்த அந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் கடந்த வாரம் 900 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்ட நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த உயர் ஸ்தானிகர், இலங்கைக்கு இந்தியாவின் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார்.

ஆசிய கணக்குதீர்வக ஒன்றிய கொடுப்பனவான USD 500 மில்லியன் ஒத்திவைப்பு, USD 400 மில்லியன் பணப் பரிமாற்றம் ஆகியவை இதிலடங்குகின்றன.

பொருளாதார மறுசீரமைப்பு, வளர்ச்சிக்காக இலங்கையுடன் இணைந்திருக்கும் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டிற்கிணங்க இந்நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment