தமிழரின் வீர விளையாட்டு! 17 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்த முருகன்
தமிழகம் மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகள் அடக்கிய வலையங்குளம் முருகன் முதலிடத்திலும் அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் பொங்கல் பண்டிகை அன்று ஆரம்பித்து பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நடைபெறும் இதில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று நடைபெறும். இதன்படி அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு ஜல்லிகட்டு போட்டி ஆரம்பித்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் 8 அடி உயரத்திற்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டி பிற்பகல் 3மணிவரை நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில்…
Read More