உள்நாடு 

அதிசொகுசு பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து…

வவுனியா ஏ9 வீதி பூனாவை பகுதியில் இன்று அதிகாலை அதிசொகுசு பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூனாவை பகுதியில் வீதியின் அருகே விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் நின்றுள்ளது. டிப்பர் வாகனத்தின் பின்பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேரூந்தொன்று டிப்பருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் குறித்த விபத்துக்குள்ளான பேரூந்துடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மற்றுமொரு அதிசொகுசு பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்துச்சம்பவத்தில் பேரூந்தில் பயணித்த 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 1 மணிநேரம் வரை ஸ்தம்பித்ததுடன் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

Leave a Comment