உள்நாடு 

தேசிய கல்வியியல் கல்லூரிகள் நாளை (15) ஆரம்பம்…

தேசிய கல்விக் கல்லூரிகள் நாளை 15ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 15ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 18ஆம் தேதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் மாணவர்கள் தமது கற்றலை ஆரம்பிப்பதற்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலங்களில் இடைத்தங்கல் முகாமாக அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பயன்படுத்தப்பட்டன. திடீரென அறிவிக்கப்பட்ட விடுமுறை காரணமாக மாணவர்கள் தமது உடைமைகள், உடைகள் புத்தகங்கள் மற்றும் தனிப்பட்ட பாவனைப் பொருட்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு வீடுகளுக்கு சென்றனர்.

தற்போது அனைத்து விடுதிகளும் மீளவும் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மாணவர்களின் அனைத்து ஆடைகளும், புத்தகங்களும், தனிப்பட்ட பயன்படுத்தல் சாதனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அல்லது அவற்றில் பயன்படுத்த முடியாத அளவில் அவை சேதப்படுத்தப்பட்டன.

எனவே, புதிதாக கல்லூரி கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்ற போதிலும் தமது உடமைகளை மீண்டும் கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து கல்வி அமைச்சர் மற்றும் உரிய தரப்பினருக்கு மாணவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுந்ஹெட்டி, எந்த ஆடையை எனும் உடுத்திக் கொண்டு வாருங்கள் என்ற அறிவித்ததோடு மாணவர்களை அழைத்து மாத்திறையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இரண்டாம் வருட மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்து குறிப்பிட்ட மூன்று மாத காலத்திற்கு தொடர உள்ளனர். இவர்கள் உயிர்க் குமிழி அடிப்படையில் தங்கவைக்க திட்டமிட்டப்பட்டாலும், விரிவுரையாளர்கள் வெளியிலிருந்தே வருகைதர உள்ளதால் இந்த முறை சாத்தியமில்லை என குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாளை ஆரம்பிக்கப்படும் கல்லூரிகளில் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 18ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment