சினிமா 

பொங்கலுக்கு களமிறங்கிய நான்கு திரைப்படங்கள்… சூடுபிடிக்கும் ரேஸ்…

கொரோனா பரவல் காரணமாக RRR, வலிமை, ராதேஷ்யாம் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் பொங்கல் ரேசில் இருந்து கடைசி நிமிடத்தில் பின்வாங்கின. இருந்தாலும் பல சிறிய பட்ஜெட் படங்கள் விடாபிடியாக இருந்து இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என உத்தரவிட்ட போதிலும், தியேட்டர்கள் எந்த நேரத்திலும் மீண்டும் மூடப்படுமே என திக்திக் சூழல் இருந்த போதிலும் கொஞ்சமும் சளைக்காமல், முழுக்க முழுக்க ரசிகர்களை நம்பி மட்டுமே சிறிய பட்ஜெட் படங்கள் சில இன்று ரிலீசாகி உள்ளன. அப்படி இன்று ரிலீசான படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

நாய் சேகர்

காமெடியன் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படம் நாய் சேகர். குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரலட்சுமி, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்டோர் நடித்து காமெடி, என்டர்டெயின்மென்ட் படம். கிஷோர் ராஜ்குமார் இயக்கி உள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. நாயை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். அனிருத் இசையமைத்துள்ளார்.

கொம்புவச்ச சிங்கம்டா

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்துள்ள படம் கொம்புவச்ச சிங்கம்டா. மடோனா செபாஸ்டியன், சூரி, யோகிபாபு, தீபா ராமானுஜம் நடித்துள்ள கிராமத்து குடும்ப கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இந்தர் குமாரின் ராதேன் சினிமாஸ் தயாரித்துள்ளது.

என்ன சொல்ல போகிறாய்

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்ன சொல்ல போகிறாய். ரொமான்டிக், காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அவந்திகா மிஸ்ரா, புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை டைரக்டர் ஹரிஹரின் எழுதி, இயக்கி உள்ளார்.

கார்பன்

விதார்த் ஹீரோவாக நடித்துள்ள த்ரில்லர் படம் கார்பன். அண்ணாதுரை படத்தை இயக்கிய டைரக்டர் ஆர்.ஸ்ரீநிவாசன் இயக்கி உள்ள இந்த படத்தில் தன்யா பாலகிருஷ்ணன், விக்ரம் ஜெகதீஸ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது விதார்த்தின் 25 வது படமாகும்.

Related posts

Leave a Comment