உள்நாடு 

மகாவலி காணிக்கு இரண்டு தரப்பினர் உரிமை கோரியமையினால் நடமாடும் சேவை இடைநிறுத்தம்….

ஹம்பாந்தோட்டையில் மகாவலி காணி பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையை இடைநடுவில் நிறுத்த நேரிட்டது. தேரர் ஒருவர் வௌியிட்ட எதிர்ப்பு காரணமாக அமைச்சர் சமல் ராஜபக்ஸவிற்கு கூட்டத்தை இடைநடுவே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தேரரின் விகாரைக்கு சொந்தமானதென கூறப்படும் காணிக்கு இரண்டு தரப்பினர் உரிமை கோரியமையினால் இந்த நிலைமை ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து, பாதுகாப்பு தரப்பினர் விகாராதிபதியை அவ்விடத்தில் இருந்து வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இவ்விடயம் தொடர்பில் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துத்தெரிவித்தார், “ஒரு இடத்தில் ஐந்து அல்லது 10 வருடங்கள் இருக்கும் போதே பிரச்சினைகள் உருவாகின்றன. அதனால் மகாவலி பிரச்சினை அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றது. இதுவரை அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் உரிய முறையில் கவனம் செலுத்தப்படவில்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதற்கே முயற்சி செய்கிறோம்.” என தெரிவித்தார்.

Related posts

Leave a Comment