உள்நாடு 

ரூ.3,998 க்கு 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது….

20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய புதிய நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்த வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று முதல் ரூ.3,998 க்கு 10 கிலோ சுப்பிரி சம்பா, தலா ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி மற்றும் பருப்பு, 500 கிராம் ஸ்ப்ரேட்ஸ் மற்றும் மசாலாக்கள் உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்க முடியும் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தைப் பொங்கல் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இந்த நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். மேலும் வழமையான சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளில் இதே பேக்கேஜின் விலை ரூ.5,771 முதல் ரூ.6,521 வரை இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

சதொச விற்பனை நிலையங்கள் இல்லாத பகுதிகளில் 1998 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு 48 மணித்தியாலங்களுக்குள் மக்கள் இப்பொதிகளை தமது வீடுகளுக்கு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment