Latest | சமீபத்தியது 

எரிபொருள் நெருக்கடிக்கு முன்வைக்கப்பட்டது தீர்வு

தற்போது நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் எரிபொருள் பாவனையை குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும், எரிபொருள் நெருக்கடி மற்றும் டொலர் நெருக்கடியை இதன் மூலம் தீர்க்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மஹரகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய குணவர்தன, நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை போன்ற எண்ணெய் உற்பத்தி அல்லாத எந்தவொரு நாடும் எரிபொருள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும், இது இலங்கைக்கு மாத்திரம் விசேடமான பிரச்சினையல்ல எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எரிபொருள் பாவனையை முடிந்தவரை மட்டுப்படுத்துவதே சிறந்த தீர்வாகும் எனவும் தெரிவித்தார்.

இதன் மூலம் நாட்டிலிருந்து வெளியேறும் டொலர்களின் அளவைக் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இயன்றவரை பயணத்தை குறைத்து, எப்போதும் இணையம் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

Leave a Comment