கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி மறுநாள் பேசவும், நடக்கவும் கூடிய திறனை பெற்ற சம்பவம்….
இந்தியாவில் நடக்கமுடியாத மற்றும் பேசும் திறனை இழந்த ஒருவர் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்ட மறுநாள் பேசவும், நடக்கவும் கூடிய திறனை பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் போக்காரோவை சேர்ந்தவர் துலர்சந்த் முண்டா (55) என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சாலை விபத்து காரணமாக பேசவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி அங்கன்வாடி ஊழியர் ஒருவர் முண்டாவுக்கு கோவிஷீல்ட் முதல் தவணை தடுப்பூசி செலுத்தினார். மறுநாள் முண்டா எழுந்து நிற்கவும், வார்த்தைகளை பேசும் திறனையும் பெற்றுள்ளார். இதனை உறுதிப்படுத்தியுள்ள மருத்துவர் ஜிதேந்திர குமார், முண்டாவின் இந்த அதிசயமான நடவடிக்கை குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட மருத்துவகுழு அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.