Sport | விளையாட்டு 

தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி: தொடரையும் வென்றது…

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், தொடர் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 11-ஆம் திகதி துவங்கியது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா அணி 210 ஓட்டங்களும், அதன் பின் 13 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 198 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, தென் ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 212 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடி வந்த தென் ஆப்பிரிக்கா அணி நான்காம் நாளான இன்று 3 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது.

Related posts

Leave a Comment