Latest | சமீபத்தியது சினிமா 

பிக் பாஸ் 5 வீட்டில் நிஜ ஜோடி? வைரலாகும் புரமோவால் ரசிகர்களுக்கு வந்த சந்தேகம்!

பிக் பாஸ் 5 சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைய புது முகங்கள் போட்டியாளர்களாக வந்ததை பார்த்து கலவையான விமர்சனத்தை பெற்றது. அதிலும் பலர் மாடலாக இருப்பதால் இந்த சீசனில் சுவாரசியம் இல்லை என கூறப்பட்டது. அதன் பின்பு தாமரை செல்வி, ராஜூ, பிரியங்கா ஆகியோர் கன்டெண்ட் தர நிகழ்ச்சி களைக்கட்டியது. பிரியங்கா vs தாமரை சண்டை, நிரூப் vs பிரியங்கா சண்டை என இந்த பிக் பாஸ் 5 சீசன் சண்டைக்காகவே டி.ஆர்.பியில் ரேட்டிங்கை பிடித்தது.அப்போது தான் 50 நாட்களுக்கு பிறகு வைல்ட் கார்டு எண்ட்ரியாக அமீர் உள்ளே வந்தார். விஜய் டிவி டான்ஸ் மாஸ்டர் அமீர் உள்ளே வந்ததும் பாவனியிடம் காதல் விளையாட்டை தொடங்கினார். மற்ற சீசனில் இருந்த லவ் டிராக் இந்த பிக் பாஸ் சீசன் 5ல் இல்லாமல் இருந்தது. அந்த குறையை அமீர் வந்து தீர்த்து வைத்தார். அதுவும் பல எதிர்மறையான நெக்டிவ் விமர்சனங்களை ஏற்படுத்த அமீர் இனிமே அதை பற்றி பேச போவதில்லை என்று தீர்மானமாக கூறி விட்டார். அதன் பின்பு டிக்கெட் டூ ஃபினாலே கேம்மை உறுதியாக விளையாடி நேரடியாக ஃபனல்ஸ் சென்றார்.

தற்போது ஃபனல்ஸ் லிஸ்டில் அமீர், பாவ்னி, ராஜூ, பிரியங்கா, நிரூப் உள்ளனர். இந்த ஞாயிற்றுக்கிழமை வின்னர் யார்? என்பது தெரிந்து விடும். இந்த வாரம் முழக்க ஃபைனல்ஸ் கொண்டாட்டம் என்பதால் பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினர்களாக பழைய ஹவுஸ்மெட்ஸ் உள்ளே வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதுக் குறித்த முதல் 2 புரமோக்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்ட நிலையில் தற்போது 3 ஆவது புரமோ வெளியாகியுள்ளது.

அமீர், பாவனியை காதலிப்பதாக பலமுறை சொல்லியும் பாவனி அதை கண்டுக்கொள்ளாமல் நண்பர்களாக இருக்கலாம் என்றார். இந்நிலையில், மூன்றாவது புரமோவில் அமீரை அழைத்து பாவனி தனியாக ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார். க்யூட்டான இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் பாவனியும் அமீரும் அடுத்த ரியல் ஜோடிகளா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லை தொடர்ந்து ரிப்பீட் மோடில் புரமோவை பார்த்து வருகின்றனர். அதே போல் பாவனியும் அமீரும் ரியல் லைஃபில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment