World | உலகம் 

பிரித்தானிய பிரதமர் பதவிலிருந்து போரிஸ் ஜான்சன் அகற்றப்படலாம்??? அடுத்த பிரதமராகப்போவது யார்???

பிரித்தானிய மகாராணியார் தன் கணவருக்காக துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்தில் பெரிய மதுபான பார்ட்டி ஒன்று நடந்தாக எழுந்துள்ள புகார், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விதிகளை மீறி பிரதமர் இல்லத்தில் பார்ட்டி நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், அன்று ஒரு நாள் மட்டுமல்ல, எல்லா வெள்ளிக்கிழமைகளிலுமே பிரதமர் இல்லத்தில் மதுபான பார்ட்டி நடந்துவருகிறது என்று புகைப்பட ஆதாரங்களுடன் அடுத்த செய்தி வெளியாகியுள்ளது. ஆக, போரிஸ் ஜான்சன், பிரதமர் பதவிலிருந்து அகற்றப்படவேண்டும் என பிரித்தானியாவில் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

அதற்குள், இன்னொரு பக்கம், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், அவருக்கு பதிலாக பிரதமராகப்போவது யார் என ஊடகங்கள் கணிக்கத் துவங்கி விட்டன. அவ்வகையில், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிலிருந்து அகற்றப்பட்டால், அவருக்கு பதிலாக பிரித்தானியப் பிரதமராக பதவியேற்க இருப்பவர்கள் என கணிக்கப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர், இந்திய வம்சாவளியினரான சேன்ஸலர் ரிஷி சுனக். ரிஷியின் பொது இடத்தில் உரையாற்றும் திறன், ஸ்மார்ட் தோற்றம், மற்றவர்களுடன் பேசும் விதம் போன்ற விடயங்கள், அவரை முன்னாள் பிரதமர் டோனி பிளேருடன் ஒப்பிடவைத்துள்ளன.

மற்றொரு இந்திய வம்சாவளியினரும் பட்டியலில் இருக்கிறார். அவர், உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல். மேலும், பாகிஸ்தான் வம்சாவளியினரான சுகாதாரச் செயலர் சாஜித் ஜாவித், வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், மாகாணச் செயலரான Michael Gove, முன்னாள் வெளியுறவு மற்றும் சுகாதாரச் செயலரான ஜெரமி ஹண்ட் மற்றும் துணைப் பிரதமரான டொமினிக் ராப் ஆகியோர் பெயர்களும் அடுத்த பிரதமருக்கான பட்டியலில் உள்ளன.

Related posts

Leave a Comment