Entertainment | பொழுதுபோக்கு, Review & Reaction சினிமா 

SKYLAB – ஸ்கைலாப் 2021 (தமிழ்) – விமர்சனம்

இது ஒரு Period Comedy-Drama படம். படத்தினை அறிமுக இயக்குனர் விஷ்வக் கண்டேராவ் இயக்கியுள்ளார். இதனை நடிகை நித்யாமேனன் தயாரித்து ஹீரோயினாக நடித்தும் உள்ளார்.

கதை நடப்பது 1979ஆம் ஆண்டு, வெளியுலகம் பற்றி அதிகம் தெரியாமல் எந்தவித வசதியும் இல்லாமல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் பட்டிவீரன்பட்டி. நகரத்தில் தனது டாக்டர் லைசென்சை திரும்பப் பெற 5,000 ரூபாய் கட்ட அந்த பணத்தை தனது தாத்தாவிடம் வாங்குவதற்காக ஹீரோ அந்த கிராமத்திற்கு வருகிறார். அதே கிராமத்தில் இருக்கும் ஜமீன்தாரின் மகள் பட்டணத்திலிருந்து தனது பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்து தனது தந்தை உடல்நிலை பார்க்க வருகிறார். அப்போது வானொலியில் ஒரு செய்தி அமெரிக்கா அனுப்பிய விண்ஆய்வுக்கூடம் செயலிழந்து பூமியை தாக்க வருவதாகவும் அது குறிப்பாக பட்டிவீரன்பட்டில் விழப் போவதாகவும் தெரிந்து மக்கள் படும் மனநிலை மாற்றங்களை கதை.

படம் முதல் பாதி முழுக்க நல்லா வித்தியாசமான காமெடியுடன் சென்றாலும் இரண்டாம் பாதி மிகவும் தொய்வு அடைந்து சொதப்பி இறுதிக் காட்சிகளில் நன்றாகவே உள்ளது. இப்படம் SonyLive OTT தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாதிக்காக படம் பார்க்கலாம்……!

Related posts

Leave a Comment