World | உலகம் 

ஜேர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம்….

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமையன்று ஜேர்மனி முழுவதும் பல்லாயிரக்கணக்கான தடுப்பூசி ஆதரவாளர்கள் மற்றும் தொற்றுநோய் (Pandemic) மறுப்பவர்கள் ஒன்று திரண்டு, தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அரசாங்கத்தின் கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது ஒலிபரப்பாளரான ARD படி, தென்மேற்கு நகரமான ஃப்ரீபர்க்கில் சுமார் 8,500 பேர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 6,000 பேர் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மீதான தடைகளை எதிர்த்தனர். அவர்களுக்கு எதிராக 2,500 பேர் போட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

Related posts

Leave a Comment