Latest | சமீபத்தியது World | உலகம் 

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு தொடரும் அபாயம்?

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கோ நாட்டில் கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறி, ‘சுனாமி’ அலை தாக்கியமை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.‘இங்கு இது போன்ற எரிமலை வெடிப்பு தொடரும்’ என புவியியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடு டோங்கோ. இங்குள்ள ஹங்காஹபாய் மற்றும் ஹங்காடோங்கா தீவுகளில் அடிக்கடி எரிமலை வெடிப்பு ஏற்படும். 5,900 அடி உயரம்இங்கு கடல் மட்டத்தில் இருந்து, 300 அடி உயரமுள்ள ஒரு எரிமலை உள்ளது. ஆனால் கடலுக்கு அடியில் 5,900 அடி உயரமும், 20 கிலோமீற்றர் துாரத்துக்கும் மிகப் பெரிய எரிமலையாக பரந்து விரிந்திருந்தது. இந்த எரிமலை சமீபத்தில் வெடித்து சிதறியது.

இதன் தொடர்ச்சியாக டோங்கோவில் உள்ள குட்டித் தீவுகளை சுனாமி அலை தாக்கியது. குடியிருப்பு பகுதிக்குள் கடல் நீர் புகுந்த ‘வீடியோ’க்கள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து புவியியல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது:வழக்கமாக கடலுக்கடியில் இருக்கும் எரிமலைகள் வெடிக்கும்போது பாறைக் குழம்புகள் கடல் நீரில் படும்போது, அந்த சூட்டில் ஆவி உருவாகி, பாறைக் குழம்புகளின் வெப்பத்தை தணிக்கும். 1,200 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருந்தாலும், எரிமலைக் குழம்பை கடல் நீர் தணிய வைத்துவிடும்.

Related posts

Leave a Comment