உள்நாடு 

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் மாயம்….

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்ற தந்தையும், மகனும் காணாமல் போயுள்ளனர். வழமையாக இயந்திரப் படகில் சென்று மீன்பிடித்து வரும் தந்தையும் மகனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கடலுக்குச் சென்று வீடு திருப்பாத இருவரையும் தேட ஆரம்பித்த ஏனைய மீனவர்கள், அவர்கள் இருவரும் சென்ற இயந்திரப் படகையும், மீன்பிடிக்க கடலில் வைக்கப்பட்ட வலையையும் மீட்டுள்ளனர். எனினும் காணாலம்போன நபர்கள் இருவரையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறு காணாமல்போன இருவரும் காயங்கேணி சுனாமி வீட்டுத்திட்ட பகுதியை சேர்ந்த 55 மற்றும் 18 ஆகிய வயதுகளுடைய தந்தையும், மகனும் ஆவர். வாகரை பொலிஸாரின் உதவியுடன் காணாமல் போன இரு மீனவர்களையும் தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment