உள்நாடு 

கண்டி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை நியமனம்….

கண்டி மறைமாவட்டத்திற்கான புதிய ஆயராக வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை இன்று (17) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. கண்டி மறைமாவட்ட ஆயராக பணியாற்றிய ஜோசப் வியானி பெர்னாண்டோ ஓய்வு பெற்றதையடுத்து, அவரது பதவிக்காக வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகையை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்தார்.

அதற்கமைய, கண்டி மறைமாவட்டத்தின் 07 ஆவது ஆயராக வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை பதிவாகியுள்ளார். அவர் தற்போது சிலாபம் மறைமாவட்ட ஆயராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment