கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் போதைப்பொருளுடன் கைது….
அம்பாறை பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து 9 இலட்சத்திற்கும் அதிக பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உஹண பொலிஸ் பிரிவில் வீடொன்றிற்குள் புகுந்த நபர்களால் 9 இலட்சத்து 29,000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் 5 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் , கொள்ளையிட்ட பணம் மற்றும் தங்க ஆபரணங்களில் ஒரு தொகுதியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 23 வயதுடைய, உஹண பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
உஹண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.