சினிமா 

பிரபல கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் காலமானார்….

கதக் நடனக் கலைஞரும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான பண்டிட் பிர்ஜு மகராஜ் தனது 83 வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் திங்களன்று காலமானார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களை கொண்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கமல்ஹாசன் தான் நடித்த விஸ்வரூபம் படத்தில் வரும் ‘உன்னை காணாது’ பாடலுக்கு சிறந்த நடன அமைப்பாளருக்கான தேசிய விருதை பிர்ஜு மகாராஜ் பெற்றார். அதேபோல் பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்திற்காகவும் தேசிய விருதை பெற்றார்.

பிர்ஜு மகாராஜ்ஜிக்கு பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, காளிதாஸ் சம்மான் ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment