இந்தியப் பிரதமருக்கான தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் கையளிக்கப்பட்டது….
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் இன்று 18- 01-2022 மாலை 5.00 மணிக்கு கையளிக்கப்பட்டது. இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டது.
இதன்போது, சம்பந்தன், நீதியரசர் விக்னேஸ்வரன், தமாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேக்ஷ் பிரேமசந்திரன், சுமந்திரன், சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த இந்தியப் பிரதமருக்கான கடிதம் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நகர்வாக கருதப்படுகிறது.