உள்நாடு 

கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் மாயம்….

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். பாணந்துறை எலுவில பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவன் நேற்று (17) மாலை தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் பாணந்துறை கடற்கரைக்கு குளிப்பதற்குச் சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருந்த போது குறித்த மாணவன் ஓடையில் தவறி விழுந்துள்ள நிலையில் தந்தையின் கழுத்தில் தொங்க முயன்ற போதிலும் அவர் காணாமல் போனார். பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று இரவு விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், இதுவரை மாணவன் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment