Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

‘ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தயார்’ – சம்பந்தன் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரத்திலும் தயாராகவே இருக்கின்றது – என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.அத்தகைய பேச்சு நிரந்தர அரசியல் தீர்வை மையப்படுத்தியதாக அமைய வேண்டும் எனவும், காலத்தை இழுத்தடிக்கும் விதத்திலான பேச்சுகளுக்கு தாம் தயாரில்லை எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதிக்கும், கூட்டமைப்பினருக்கும் இடையில் இம்மாத இறுதியில் சந்திப்பு இடம்பெறவுள்ளது என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் வினவியபோதே சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.

” பேச்சுக்கான அழைப்பு இன்னும் தமக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தயாராகவே இருக்கின்றோம். அந்த பேச்சு நிரந்தர அரசியல் தீர்வை மையப்படுத்தியதாகவே இருக்க வேண்டும். பேச்சு என்ற போர்வையில் காலத்தை இழுத்தடிக்கும் முயற்சி இடம்பெறக்கூடாது. அதற்கு நாம் தயாரில்லை” – என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment