உள்நாடு 

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் மின் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினரது தொழிற்சங்க போராட்டத்தினால் மின் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சபையின் பதில் பொதுமுகாமையாளர் கலாநிதி சுகந்த பெரேரா தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தினர் சுகயீன விடுமுறைக்கமைய இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முன்வைத்துள்ள காரணிகள் அடிப்படையற்றவை.

எனது நியமனம் சட்டத்திற்கு முரனாணதல்ல. பதில் பொதுமுகாமையாளராக தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டுள்ளேன். பதவி நியமனம் குறித்து மின்சார சபை நிறைவேற்று சபை உரிய தீர்மானத்தை முன்னெடுக்கலாம். மின்சார சபை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் பிறிதொருவர் இப்பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கவில்லை.

மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தினரது தொழிற்சங்க போராட்டத்தினால் மின்விநியோகத்திற்கு எவ்வித பாதிப்புதம் ஏற்படாது. மின்சார சபை எரிபொருள் பெறலில் நெருக்கடி நிலைமையை எதிர்க்கொண்டுள்ள வேளையில் தொழிற்சங்கத்தினர் பிறிதொரு நெருக்கடியினை ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது.

மின் உற்பத்தி மற்றும் மின்விநியோகத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ள மின்சார சபை பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளது. மின்விநியோகத்தை தடையில்லாமல் வழங்க முழுமையாக முயற்சிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

Related posts

Leave a Comment