உள்நாடு 

மக்கள் வெள்ளத்தில் கொழும்பு துறைமுக நகர மெரினா வலயம்…..

கடந்த 8 நாட்களில் 89,540 பேர் கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு துறைமுக நகருக்கு வெளியே பொதுமக்கள் பார்க்கும் கேலரியில் நுழைய நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும், சிறு குழந்தைகளுடன் பெற்றோர், இளம் தம்பதிகள், வாலிபர்கள் நீண்ட நேரம் நின்று உள்ளே நுழைவதிற்கு ஆர்வமாகவும் உள்ளனர்.

இதன் மூலம் கொழும்பு ஒரு நிதி மையமாக மாறுவதற்கு துறைமுக நகரம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 9 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா வலயம் பொதுமக்களுக்காக தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment