உள்நாடு 

மின்விநியோகத்திற்கு தேவையான எரிபொருளை இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவது பாரதூரமானது – தொழிற்சங்கம் கடும் சாடல்

அனல் மின் நிலையத்தையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு மின்சாரத்துறை அமைச்சு தள்ளப்பட்டுள்ளது என மின்சாரத்துறை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சாரத்துறை அமைச்சுக்கு மின் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதால் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. மின்சார சபை டொலர் வழங்கினால் தான் எரிபொருள் விநியோகிக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட முடியாது. நாட்டில் எரிபொருள் இறக்குமதி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கான உரிமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மாத்திம் உண்டு.

தேசிய மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அக்கறை கொள்ளாமல் மின்சாரத்துறை அமைச்சரும், வலுசக்தி துறை அமைச்சரும் முரண்பட்டுக் கொள்கிறார்கள். மின் மற்றும் எரிபொருள் விடயதானம் குறித்து இருவருக்கும் தெளிவில்லை என்றே குறிப்பிட வேண்டும். மின்உற்பத்தி மற்றும் மின்விநியோகத்திற்கு தேவையான எரிபொருளை இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது என்றும் அவர் கூறினார்.

Related posts

Leave a Comment