World | உலகம் 

மேற்கு ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 26 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு மாகாணமான பட்கிஸில் உள்ள காதிஸ் மாவட்டத்திலேயே 5.3 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் திங்கட்கிழமை பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வீடுகளின் கூரைகள் இடிந்து வீழ்ந்ததில், பலர் உயிரிழந்துள்ளதாக மாகாணத்தின் செய்தி தொடர்பாளர் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் நான்கு குழந்தைகள் / சிறுவர்கள் அடங்குவதாகவும் மற்றும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

5.3 ரிச்டெர் அளவிலான முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, 4.9 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு நிலநடுக்கம் காரணமாகவும் சுமார் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அங்கு மீட்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

Leave a Comment