இலங்கையில் ஐந்தாவது கோவிட் அலை?
ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக இலங்கையில் ஐந்தாவது கோவிட் அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
நீண்ட வார இறுதி பேரணிகள் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் தினமும் பதிவாகும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் ரணவீர கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் நேற்றும் 672 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாவர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றையதினம் 13 கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.