ஒமைக்ரோனை கட்டுப்படுத்த திணறும் தடுப்பூசிகள் – இஸ்ரேல் வெளியிட்ட தகவல்
மனிதர்களுக்கு நான்கு முறை கொரோனா தடுப்பூசிகள் போட்டும் கூட ஒமைக்ரோனுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி வரவில்லை என்று இஸ்ரேல் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் ஒமைக்ரோன் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஒமைக்ரோன் பரவல் காரணமாகப் பல நாடுகளில் மூன்றாம் அலை பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுதும் ஒமைக்ரோன் பரவலை எப்படித் தடுப்பது என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.