சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு நன்கொடை….
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.
குறித்த அரிசி தொகை எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்