Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

ஜனாதிபதியின் செயலாளராக இன்று கடமைகளை பெறுப்பேற்கவுள்ளார் காமினி செனரத்…..

ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் பிரதமரின் செயலாளராக பதவி வகித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து கலாநிதி பி.பி.ஜயசுந்தர அண்மையில் இராஜினாமா செயத நிலையிலேயே அந்த வெற்றிடத்துக்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

காமினி செனரத் 1984 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்டதுடன் அதன் பின்னர் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் தலைமை அதிகாரியாகவும் மேலதிக செயலாளராகவும் இருந்துள்ளார்.

Related posts

Leave a Comment