ஜே.வி.பி போராட்டத்தில் முட்டையால் தாக்குதல்…..
மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் போராட்டம் நடத்திய போது முட்டையால் தாக்குதல் நடத்தப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.