Latest | சமீபத்தியது உள்நாடு 

துறைமுகத்தில் தேங்கியுள்ள 800 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பு……

டொலர்கள் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள 800 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி இன்று முதல் சந்தைக்கு தேவையான கொள்கலன்கள் விடுவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதனால் அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு காணப்படாது என தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment