உள்நாடு 

போதைப்பொருள்களுடன் மூவர் கைது….

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் நேற்று மாலை 300 மில்லிக் கிராம் ஹெரோயின் மற்றும் 9 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் குறித்த நபர்கள் மூவரும் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற மாங்குளம் பொலிஸார் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment